60 கூறியது கூறல் முதலிய குற்றம் உடைத்தாம் அன்றே எனவும், கற்றுவல்ல சான்றோரும் மற்றோர் கோட்பாடு பற்றிச் செய்யின் முனைவன் நூலொடு முரணும் அன்றே எனவும் ஐயுற்று ஊக்கம் செல்லாமையின், அவ்வையம் நீக்குதற்பொருட்டு ஆக்கியோன் பெருமையும் நூற் பெருமையும் அந்நூல் வழங்கும் நிலனும் அதன் முதல் நூலும் இன்ன என்பது தோன்ற, ஆக்கியோன் பெயரும் வழியும் எல்லையும் நூற்பெயரும் உணர்த்தல் வேண்டும் எனச் சிறப்புப்பாயிரத்துள் எட்டும் தெரிவிக்கப்படல் வேண்டுவதன் இன்றியமையாமையை யாப்பு, கேட்போர் என்பனவற்றிற்குத் தாம்கொண்ட பொருளுக்கு ஏற்ப விளக்கியுள்ளார். அவருள், இந்நூற்பாயிரம் செய்தார் தம் மாணாக்கர் ஆகிய தம் புதல்வர் சதாசிவ நாவலர் என்று உணர்க. சிறப்புப்பாயிரம் ‘கடல்விளிம்பு உடுத்த கண்அகல் ஞாலத்து அடரும்வல் இருள்துரந்து அனைத்தையும் விளக்கும் பல்கதிர்ப் பருதியின் பரம்பரன் அருளால் உள்அகத்து இருள்கடந்து உறுபொருள் எவற்றையும் பால்படத் தொடுத்த பதினெண் மொழியுளும் மேல்கடல் கீழ்க்கடல் வேங்கடம் குமரி ஆகிய எல்லையுள் அருந்தமிழ்ப் பௌவத்து எழுத்துமுதல் மூன்றையும் யாவரும் தெரியத் தொகைவகை விரியின் பகருக என்னா வேதியர் திலகன் விரவலர் கோளரி மாதையர் அதிபன் வரகுண மேரு கல்விக்கு எல்லை கருணைக்கு ஆகரம் பெருமாள் மெய்த்தவப் பேறுஎனத் தோன்றிய திருமால் உலகம் செவ்விதின் புரக்கும் மேதகு புகழ்த்திரு வேங்கட நாதன் ஓதினன் ஆக உவகைமீ தூர |
|