பக்கம் எண் :

61

முன்னோர் நூலின் முடிவு நோக்கிச்
சொல்லும் பொருளும் ஒல்வன தழீஇப்
பல்சுவைக் கரும்பின் ஒருவட்டு ஏய்ப்ப
இலக்கண விளக்கம் என்றுஒரு பெயர்நிறீஇப்
புலப்படுத்து இயல்உறப் பொருள்விரித்து உரைத் [தனன்
பவத்தொகை அகற்றும் தவத்தின்வரம்பு ஆனோன்
பன்மீன் நாப்பண் பால்மதி போல
வன்மீக நாத மாதவன் வரத்தால்
அந்தண் ஆருர் வந்துஅருள் செல்வன்
வலம்புரி ஒருமுத்து அன்ன
நலம்புரி வைத்திய நாததே சிகனே’.

இதன்பொருள்: கடலினைத்தன் மருங்கு இடத்தே சூழ்ந்த இடம் அகன்ற உலகின்கண்ணே செறிந்த கடிதாகிய இருளை ஓட்டி நிலம் நீர் முதலிய எல்லாப் பொருள்களையும் விளக்கும் பல கிரணங்கள் உடைய ஞாயிறுபோல, எவற்றிற்கும் மேலான இறைவன் தனது அருளினாலே உள்ளத்திடத்து அவிச்சையை அகற்றி உறுதிபயக்கும் அறம் முதலிய பொருள் எல்லாவற்றையும் பகுதிப்பட விளக்கிய பதினெட்டு மொழியுள்ளும், குடகடலும் குணகடலும் வடவேங்கடமும் தென்குமரியும் ஆகிய நான்கு எல்லைக்குள் வழங்கும் அரிய தமிழாகிய கடலிடத்து உளவாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் ஆகிய மூன்றனையும் எல்லாரும் ஆராய்ந்து அறிதற்பொருட்டுத் தொகையானும் வகையானும் விரியானும் கூறுவாயாக என்று அந்தணருள் திலகம்போலச் சிறந்தோன், குறுகலருக்கு ஒரு சிங்க ஏறுபோல்வான். ‘மாதை என்னும் நகரத்து உள்ளார்க்குத் தலைவன், நற்குணங்கள் எல்லாம் திரண்டதொரு மேருமலை’, கல்வியாகிய கடலுக்கு ஒருவரம்பாய் உள்ளான், அருளினுக்கப் பிறப்பிடம் ஆயினோன், பெருமாள் என்னும் வேதியன் உண்மைத் தவத்தினால் பெற்றபேறு என்று