62 உலகத்தார் வாழ்த்த உதயஞ் செய்த திருமால், உலகத்தை எல்லாம் நீதிகோடாமல் காத்து அருளுகின்ற தலைமைபூண்ட புகழைப் பொருந்திய திருவேங்கடநாதன் என்னும் இயற்பெயரை உடையோன் அருளிச் செய்தனன் ஆக, மகிழ்ச்சி மேல்மேல் கிளைப்ப, முன்னோர் கூறிய நூல்களினுடைய முடிபினை ஐயம் திரிபு அற ஆராய்ந்து’ அவர் ஓதிய சூத்திரத்துள்ளும் அவற்றின் பொருளுள்ளும் ஈண்டைக்குப் பொருந்துவனவற்றை அணைத்துக்கொண்டு, பலவாகிய சுவையை உடைய கரும்பினின்றும் உளதாகிய ஒரு சருக்கரைக் கட்டிபோல, இலக்கண விளக்கம் என்னும் ஒரு பெயரை நிலைநிறுத்தி விளக்கி, உண்மையுற எழுத்து முதலிய மூன்று பொருளையும் தெளியக் கூறினான்: பிறவித் துன்பம் முழுதையும் போக்கும் தவத்திற்கு ஓர் அணை ஆயினோன், தாரகா கணங்களின் நடுவண் விளங்கும் வெண்திங்கள்போல, வன்மீகநாதன் என்னும் பெரிய தவத்தினை உடையோன் வரத்தினால் திருவாரூரில் உதயம் செய்த திருவாளன், வலம்புரிச்சங்கம் ஈன்ற தனி முத்தம் போன்ற நல்லொழுக்கங்களை மேற்கொண்டு செலுத்தும் வைத்தியநாதன் என்னும் இயற்பெயரை உடைய குரவன் என்றவாறு. ‘வைத்தியநாதன்’ எனவே ஆக்கியோன் பெயரும் ‘முன்னோர் நூலின் முடிபு நோக்கி’ எனவே வழியும் ‘மேல் கடல் கீழ்க்கடல் வேங்கடம் குமரி ஆகிய எல்லை’ யின் எனவே எல்லையும் ‘இலக்கண விளக்கம் என்று ஒரு பெயர் நிறீஇ’ என்வே நூற்பெயரும், ‘தொகை வகை விரியின் பகருக என்னா’ எனவே யாப்பும், ‘எழுத்து முதல் மூன்றையும்’ எனவே நுதலிய பொருளும், ‘யாவரும் தெரிய’ எனவே பயனும், ‘மேதகு புகழ்த் திருவேங்கடநாதன் ஓதினன் ஆக’ எனவே காரணமும், அவன் காலத்து எனவும், அவன் அவைக் களத்து எனவும், அவன் அவை உள்ளார் கேட்டார் |