63 எனவும், காலமும் களனும் கேட்டோரும் ஆகிய பதினொரு வகையும் இச்சிறப்புப் பாயிரத்துள் போந்தவாறு உணர்க. சிறப்புப்பாயிரம் முற்றிற்று. இலக்கண விளக்க நூலின் சிறப்புக்கண்டு பொறாதார் ஆகிய ஒருசிலர் சிவஞானமுனிவரை வேண்டினாராக, அவர்கள் மனம் அமைதியுறுவதற்காகச் சிவஞான முனிவரால் இந்நூற் கருத்துக்கள் சில ஏலாதன என்று மறுக்கும் வாயிலாக இலக்கண விளக்கச் சூறாவளி என்ற நூலொன்று இயற்றப்பட்டது. பவத்தொகை அகற்றும் தவத்தின் வரம்பு ஆனவர் ஆகிய இவ்வாசிரியரைச் சூறைக்காற்று என் செயல் இயலும்? அச் சூறாவளி அநியாய கண்டனம் என்று அறிஞர் பலரும் உட்கொண்டார் ஆகவே, அதனால் இந்நூற் பெருமைக்கு இழுக்கு ஒன்றும் ஏற்பட்டிலது. எனினும், சூறாவளியின் கருத்துக்களையும் அறிதல் வேண்டும் என்ற அவா உடையார்க்குப் பயன்படும் வகையான் சூறாவளியும் இயைபுடைய இடங்களில் எல்லாம் இணைத்துக் கூறப்பட்டுள்ளது. இலக்கண விளக்கச் சூறாவளி பாயிரம் முன்னர்ப் பாயிரத்தை வைத்து இது பாயிரம் என்று உரைத்துப் பின்னர் அது கேட்ட மாணாக்கர்க்கு நூல் உரைப்பான் தொடங்கினார். இப்பாயிரம் உரைக்க வேண்டுவது என்னை என்னும் கடா நிகழ்தற்கு இடன் உளதாயவழி, இவ்விவ்வேதுக்களான் முன்னர்ப் பாயிரம் உரைக்க வேண்டும் என்று இறுத்தல் அமையும். அவ்வாறு ஓர் இயையும் இன்றித் ‘திருவிளங்கிய மாநகரம்’ முதலாக எடுத்து உரைக்கும் உத்தரம் செப்பு |