64 வழுவும், மற்றொன்று விரித்தலுமாய் முடியும் என்று அறிக இவ்வாறு தொல்லாசிரியர் உரையாமையும் காண்க. ‘கங்கை ஆடிப்போந்தேன்; ஒருபிடி சோறு தம்மின்’. எனக் கடா இன்றியும் செப்பு நிகழ்ந்ததால் எனின், கொடுப்போன்பால் ஏற்போன் சென்றுழி அவன் ‘யாண்டு வந்தாய்?’ எனக் கடாவான் ஆயினும், கடா நிகழ்தற்கு இடம் உண்மையின் அதுவும் வினாய பொருளை அறிவுறுத்தலேயாம் என்க. அங்ஙனம் கொள்ளாக்கால், செப்பு இலக்கணம் பொருந்தாமை அறிக. வடநூலாரும் மேற்கோள் முன்னர்க் கூறியே பின்னர் ஏது முதலிய நான்கு உறுப்பும் ஒன்றன்பின் ஒன்று இயைபுபடக் கூறுமாறு அறிக. பரிமேலழகர் உரையாளர் பாயிம் இயம்புதல் கடன் என்பது பற்றிய ‘இந்திரன் முதலிய’ முதலாகச் சிறப்புப்பாயிரமே உரையாற் கூறினார். இது நிற்க. அவயவம் ஆகிய பாயிரத்துள் அவயவி ஆகிய நூல் அடங்காது என்றார். அவற்று இயல்பு உணராமையின். அன்றியும் ஆசிரியர் தொல்காப்பியனார் நூலின் இயல்பு மரபியலுள் கூறினார். ‘மூன்ற உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் எனவும், ‘ஒத்துப்படலபம் என்னும் உறுப்பின்’ எனவும் கிளந்து ஓதுதலின் அஃது அவயவம் என்பது அவர் அறிந்திலர் போலும், இன்னும் ‘நூல் நுதல் பொருளைத் தன்னகத்து அடக்கி’ என்பனைத் தழீஇயினார் ஆகலின், நூலியல்பு பாயிரத்துள் அடங்காது என்றல் அவர்க்குங் கருத்து அன்று என மறுக்க. சிறப்புப்பாயிரத்துள் ஆக்கியோன் பெயர் முதலியவற்றிற்கு எடுத்துக் காட்டினவற்றுள் சிலபொருந்தாமை தொல்காப்பியப்பாயிர விருத்தியில் விரித்து உரைத்தாம்; ஆண்டுக் காண்க பாயிரம் முற்றிற்று. |