பக்கம் எண் :

552

வெள்ளாளன் என நின்றதனை அன்கெடுத்துப் பிரித்து ளகரஒற்றினை ணகரஒற்றாருக்கி வெள்ளாண்குமரி-பிள்ளை-மாந்தர்-வாழ்க்கை-ஒழுக்கம் என முடிப்பதும், இன்னோரன்ன பிறவும், சில விகாரமாம் உயர்திணை (71) என்பதனான் முடியும்.

தேக்கடிது தேங்கடிது என அல்வழிக்கண் இம் முடிபு எய்தும் என்பாரும் உளர். ‘னஃகான் கிளைப்பெயர் (122) எனவும். ‘மீன்றாவ் வொடுபொரூஉம்’ (123) எனவும் மேல்நின்ற அதிகாரத்தான் இம்முடிபுகள் வேற்றுமைக்கண்ண என்றே கோடும்.

விளக்கம்

எய்தியது-வேற்றுமைக்கண் வல்லெழுத்து இயையின் னகரம் றகரம் ஆகும் என்பது. 119

விலக்குதல்-உறழ்ச்சியும், ஈறுபோய் வலி மெலி மிகுலும் என்பன.

எய்தியது இகந்து படாமை காத்தல்-மென்கணமும் இடைக்கணமும் வரின் ‘எண்மு எழுத்து ஈற்று’ (69) என்பதனால் எய்திய இயல்பு முடிபு.

மேல்நிலை ஒத்தல்-தேன்குடம், தேற்குடம் என்ற முடிபு. ஈறுபோய் வலிமெலி மிகுதல்-தேக்குடம் தேங்குடம் முதலியன.

மெலிவரின் உறழ்தல்-தேன்நெரி முதலியன. இடைவரின் இயல்பு-தேன்யாப்பு தேன்வலிமை முதலியன.

தேன்+இறால்-தேனின் இறால் இ. வி. 149

தேன்+இறால்-தேனிறால் இ. வி. 64

தேன்+இறால்-தே+த்+த்+இறால்-தேத்திறால் என முடியும் வழி இடையே நிலைமொழி ஈற்று னகரம்