562 இயல்பினும் விதியினும் (82) என்ற பொதுவிதியால் வல்லெழுத்துப் பெறுதல் தெளிவாகவும், அதனை ஈண்டு மீண்டும் கூறுதல் மிகை. அம்மிகையான் கன்னக்கடுமை கன்னங்கடுமை என்ற பண்புப்பெயர் வருமொழியாக வருங்கால் நிகழும் புணர்ச்சி வேறுபாடும், அல்வழிக்கண் கன்னங் கடிது என அகரமும் மெல்லெழுத்தும் பெறும் புணர்ச்சி வேறுபாடும், இருவழியும் கன்னஞான்றது கன்னஞாற்சி என அகரம் பெற்றுவரும் இயல்புகணப் புணர்ச்சி வேறு’ பாடும் கொள்ளப்பட்டன. பொருட்பெயரொடு புணரும்வழி வேற்றுமைக்கண் கன் என்பது அகரம் பெறும் எனவே, குணப்பெயரொடு புணரும் வழி உகரம் பெறும் என்பது தொடர் ஆற்றலால் பெறப்பட்டது. இவை தொழிற்பெயரை ஒப்பன எனவே இவை தொழிற்பெயராகவே இருத்தல் வேண்டும் என்ற வரையறை இன்மைபோதருவதால், இவை தொழிலையும் உணர்த்தலாம், பொருளையும் உணர்த்தலாம் என்பது பெறப்படும். ‘புணர்ச்சியான் வரும் கன்னம் என்பது வேறு, இயல்பாகவரும் கன்னம் என்ற மகர ஈற்றுப்பொருட்பெயர் வேறு, என்றார். புணர்ச்சியான்வரும் கன்னம் என்பதன் பொருள் சிறு தராசுத்தட்டு என்பது. மகர ஈற்றுக் கன்னம் என்பதன் பொருள் நோய் தணித்தற்கு வேலன் எடுக்கும் படிவம் என்பது. இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ள இப்புணர்ச்சி பற்றிய செய்திகள் யாவும் தொல்காப்பியம் 345, 346ஆம் நூற்பாக்களில் ஓதிய செய்திகளே. நன்னூல் விருத்திரையுள் (217) கன்னத்தட்டு கன்னந்தட்டு என்பன அல்வழிப் புணர்ச்சிக்கும் கன்னத் |