பக்கம் எண் :

563

தூக்கு கன்னந்தூக்கு என்பன வேற்றுமைப் புணர்ச்சிக்கும் எடுத்துக்காட்டுக்களாகத் தரப்பட்டுள்ளன. எனவே கன்னத்தட்டு கன்னந்தட்டு என்பன இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகையாகவும், கன்னத்தூக்கு கன்னந்தூக்கு என்பன ஆறாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாகவும் கொள்ளத்தக்கன. ‘முன்னென்ற சொல்லை முன்னம் என்றாற்போல, கன்னென்ற சொல்லைக் கன்னம் என்றும் கூறுப’ என்பது நன்னூல் விருத்தியுரை

ஒத்த நூற்பாக்கள்:

‘மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் வேற்றுமை இயல.’           தொல். 346

‘வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு
தோற்றம் வேண்டும் கன் என்கிளவி.’           தொல். 346

‘மின்பின் பன்கன் தொழிற்பெயர் அனைய
கன் அ -ஏற்று மென்மையோடு உறழும்.’           நன். 217,           மு. வீ. பு. 173

‘மின்பின் உவ்வுறில் வன்மை மிகுமே.’           தொ.வி. 25

வேற்றுமையில் ‘அழன்’ முன் வன்கணம்

128. அழன்என் இறுதி கெடும்வேற் றுமைக்கே.

இது னகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியத விலக்கிப் பிறிதி விதி வகுக்கின்றது.

(இ-ள்) அழன் என்சொல் ஈற்று னகரம் கெட்டு முடியு வேற்றுமைக்கண் என்றவாறு.

வரலாறு: அழக்குடம்-சாடி-தூதை-பானை- எனவரும்.