564 அழக்குடம்-பிணக்குடம் தன் என் என்பவற்று இறுதினகரம் தன்பகை தற்பகை என்பகை எற்பகை என உறழ்தலும், நீ என்னும் ஈகார ஈற்றுப்பெயர் நின் என நின்றவழி நின்பகை என இயல்பு ஆதலும், ‘பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்’ (71) என்னும் சூத்திரத்தான் முடியும். விளக்கம் எய்தியது-னகரம் றகரமாகத் திரிதல் (119) பிறிதுவிதி-னகரம்கெட வன்கணம் மிகுதல் ‘தன் என் என்பவற்று ஈற்றுன வன்மையோடு உறழும் நின்ஈறு இயல்பாம் உறவே.’ நன். 218 என்ற நூற்பாச் செய்தியை இவ்வாசிரியர் ‘பொதுப்பெயர்’ என்ற நூற்பாவில் அடக்கியுள்ளார். தன்என் நின் என்பன இயல்பான சொற்கள் அல்ல; தான் யான் நீ என்பனவற்றின் திரிபு ஆதலின் இவை தனியே கூறப்பட்டன என்பது நன்னூல் விருத்தியுரையாசிரியர் கருத்து (218) அழக்குடம் என்பதன் பொருள் நச்சினார்க்கினியர் உரைத்தது. அவர் தற்புகழ், தற்பாடி, எற்புகழ், எற்பாடி என்ற திரிபுகளைத் ‘தோற்றம்’ என்ற மிகையால் கொண்டார் (353) ஒத்த நூற்பாக்கள்: ‘அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே’ தொல். 354 ‘தான்யான் எனும்பெயர் உருபியல் நிலையும்.’ 352 ‘வேற்றுமை அல்வழிக் குறுகலும் திரிதலும் தோற்றம் இல்லை என்மனார் புலவர்.’ 353 |