565 ‘நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும் ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்’ 253 ‘என்தன் வலிவரின் இயல்பும் திரிபுமாம் நின் என்றும் இயல்பாய் நிற்கும் என்ப.’ தொ.வி. 25 ‘அழன்ஈறு கெடவலி ஆயிடை மிகுமே.’ மு. வீ. பு. 177 ‘தான்முதல் குறுகலும் யான்என் ஆகலும் ஆகும் அல்வழி அல்லாக்காலை.’ 179 ‘குறுகலும் திரிதலும் அல்வழிக்கு இலவே.’ 180 ‘நீஎன் ஒருபெயர் நின்எனத் திரியும்.’ 53 மகரஈற்றுச் சிறப்புவிதி 129-132 மகரஈற்றின் முன் நாற்கணம் 129. மவ்வீறு ஒற்றழிந்து உயிர்ஈறு ஒப்பவும் வன்மைக்கு இனமாத் திரிபவும் ஆம்பிற. இது முறையானே மகரஈறு நாற்கணத்தோடும் இருவழியும் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) மகர ஈற்றுமொழிகள் நாற்கணமும்வர இரு வழியும் இறுதிமகர ஒற்றுக்கெட்டு உயிர்ஈறுபோல் வல்லெழுத்துவரின் அவை மிக்கும், ஏனை இரண்டு இனமும் வர அவை இயல்பாயும், உயிர்வரின் உடம்படு மெய்பெற்றும் முடிவனவும், வல்லெழுத்துவரின் ஈறுகெடாது அவற்றிற்கு இனமான மெல்லெழுத்துக்களாய்த் திரிந்து முடிவனவும் உளவாம் இருவழியும் என்றவாறு. வருமொழி வரையாமையின், நாற்கணமும் வரக்கேடு பெற்றாம், |