பக்கம் எண் :

566

எ-டு, மரக்கோடு-செதிள்-தோல்-பூ-ஞாண்-நூல்-மணி-யாழ்-வட்டு-அடை-ஆட்டம் எனவும்.

வட்டக்கல்-சுனை-தாழி-பாறை-ஞான்றது-நீண்டது-மாண்டது-வலை-அடி-ஆடி எனவும்,

இருவழியும் நாற்கணமும் வர ஈறுகெட்டு உயிர்ஈறு போல முடிந்தன,

முண்டக்கோதை எனவும்,

கலக்கொள்-கக்கு-தோரை-பயறு-எனவும்,

வேழக்கரும்பு - நீலக்கண் - வட்டத்தடுக்கு - சதுரத் தண்டு- ஆய்தப்புள்ளி -மரஞான்றது-மரநீண்டது-நில நீர்-அகரமுதல-பவளவாய்ஆய்தவுலக்கை எனவும் வருவனவும் அன்ன.

இலவங்கோடு-செதிள்-தோல்-பூ எனவும்,

மரங்குறிது-சிறிது-தீது-பெரிது எனவும் இருவழியும் வல்லெழுத்துவரத் திரிந்து முடிந்தன.

‘பிற’ என்ற மிகையானே, இலவம்பூ

‘புலம்புக்கனனே புல்அணற் காளை’           (புறநா. 258-6)

‘கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ’ (மலைபடு, 50) எனவும்,

மரம் பெரிது,

‘இலம்படு புலவர் ஏற்றகைந் நிறைய’ (மலைபடு. 576)

‘இலம்பாடு நாணுத் தரும்’           (சிலப். 9-73)

எனவும் இருவழியும் பகரம் வந்துழிக்கேடும் திரிபும் இன்றி இயல்பு ஆதலும் கொள்க.