பக்கம் எண் :

567

விளக்கம்

மரக்கோடு, பூ-வேற்றுமைக்கண் ஈறுகெட்டு வலி மிக்கன.

மரஞாண்-வட்டு-வேற்றுமைக்கண் ஈறுகெட்டு முடிந்தன.

மரவடை மரவாட்டம்-வேற்றுமைக்கண் ஈறுகெட்டு உடம்படுமெய் பெற்றன.

வட்டக்கல்-பாறை-அல்வழிக்கண் இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஈறுகெட்டு வல்லெழுத்து மிக்கு முடிந்தன.

வட்டஞான்றது-நீண்டது-மாண்டது-அல்வழிக்கண் எழுவாய்த் தொடர் ஈறுகெட்டு இயல்பாயின.

வட்டவலை-இருபெயரொட்டுப் பண்புத்தொகை ஈறு கெட்டு இயல்பாயிற்று.

வட்டவடி, வட்டவாடி-இருபெயரொட்டுப் பண்புத் தொகை ஈறுகெட்டு உடம்படு மெய் பெற்றுப் புணர்ந்தன.

முண்டகக்கோதை-முண்டகத்தினது கோதை; ஆறாம் வேற்றுமைப் பொருண்மைக்கண் பொருட்பெயர் ஈறுகெட்டு வலிமிக்கது.

கலக்கொள்..........பயறு-இருபெயரொட்டு ஈறுகெட்டு வலிமிக்கன.

வேழக்கரும்பு, நீலக்கண், வட்டத்தடுக்கு, சதுரத்தண்டு, ஆய்தப்புள்ளி, ஆய்தவுலக்கை - இருபெயரொட்டுப் பண்புத் தொகை வலிவரின் ஈறுகெட்டு மிக்கும், உயிர்வரின் ஈறுகெட்டு உடம்படு மெய்பெற்றும் புணர்ந்தன.