பக்கம் எண் :

568

நீலக்கண் உவமைத்தொகையும் ஆம். பவளவாய் என்பதும் அது. நிலநீர்-உம்மைத்தொகை, அகர முதல-அன்மொழித்தொகை, மரநீண்டது, மரமாண்டது-எழுவாய்த்தொடர்.

இலவங்கோடு...............பூ ஈற்றுமரம் வருமொழி வல்லெழுத்திற்கு ஏற்ற இன மெல்லெழுத்தாகத் திரிந்தது.

‘கசதப முதலிய மொழிமேல் தோன்றும்
மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான்
ஙஞநம என்னும் ஒற்றா கும்மே
அன்ன மரபின் மொழிவயி னான.           தொல். 143

இலவம் பூ, புலம்புக்கனன், இலம்படுபுலவர், இலம்பாடு

மரம்பெரிது-நிலைமொழி ஈறுதிரியாது இயல்பாகப் புணர்ந்தது.

எடுத்துக்காட்டுக்களுள்.

மகர இறுதி வேற்றுமை ஆயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே’           தொல். 310

என்ற நூற்பா உரையில் மரக்கோடு-செதிள்-தோல்-பூ முண்டகக்கோதை மரஞாண், மரநூல் மரமணி-யாழ்-வட்டு-அடை, முண்டகக்கோதை என்பனவற்றையும், ‘அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும்’ (தொல் 314) என்ற நூற்பா உரையில் கலக்கொள்-சுக்கு-தோரை-பயறு, வட்டத்தடுக்கு ஆய்தப்புள்ளி, நீலக்கண், வேழக் கரும்பு, ஆய்தவுலக்கை, அகரமுதல, மரங்குறிது சிறிது- தீது-பெரிது ஞான்றது-நீண்டது மாண்டது, பவளவாய், நிலநீர், என்பனவற்றையும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகளாகத் தந்து ‘மரஞாண் மரநூல் என்பனவற்றிற்கு நான்கன் உருபு விரிக்க’ எனவும், ‘பவளவாய் என உவமத்தும் நிலநீர் என எண்ணிடத்தும் கேடு கொள்க’ எனவும் குறிப்பிட்டன யாவும் இவ்வாசிரியரால் கொள்ளப்பட்டுள்ளன.