569 வட்டக்கல்-சுனை-தாழி-பாறை-வட்டஞான்றது-நீண்டது-மாண்டது-மரவாட்டம், இலவம்பூ எனப் பகரம் வருவழித் திரியாததற்கு எடுத்துக்காட்டு ஆகியவை நன்னூல் 218ஆம் நூற்பாவில் மயிலைநாதர் காட்டியனவே. ‘புலம் புக்கனனே’ என ஏழாம் வேற்றுமைப் பொருண்மைக்கண் இயல்பாதலை ‘மெல்லெழுத்து மிகுவழி (தொல். 157) என்ற இரண்டாம் வேற்றுமைப் புறனடை நூற்பா உரையிலும் ‘புலம்பக்கனனே’ கலம்பெறு கண்ணுளர்’ என்பன இயல்பாய்ப்புணர்தலை மெல்லெழுத்து உறழும் (தொல். 312) என்னும் நூற்பா உரையிலும், இலம்படுபுலவர், இலம்பாடு என அல்வழிப்பொருள்படும் உரிச்சொல் தொடர்கள் இயல்பாதலை ‘இலம்என் கிளவிக்கு’ (தொல். 316) என்ற நூற்பா உரையிலும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். ‘கலம்பெறு கண்ணுளர்’ என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலின் பொதுவிதி ஏலாது இயல்பாயிற்று. புலம்புக்கனன், கலம்பெறுகண்ணுளர்- வேற்றுமை முடிபு. மரம்பெரிது இலம்படுபுலவர் இலம்பாடு அல்வழி முடிபு. மரம்பெரிது என்புழித் திரிபு இன்று என்பது ஆணை கூறல் என்னும் உத்தி என்பார் நச்சினார்க்கினியர். (தொல். 314) ஒத்த நூற்பாக்கள்: மகர இறுதி வேற்றுமை ஆயின் துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே’. தொல் 310 ‘அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும்.’ 314 ‘இலம்என் கிளவிக்குப் படுவரு காலை நிலையிலும் உரித்தே செய்யுள் ஆன.’ 316 ‘வன்மை வந்தால்பின் பத்தாம் உயிர்வன்மைவருக்கத் தம்மைஒற் றாகும் ஞநமக்கள் பின்வரின் சாற்று மப்போம்.’ வி. 19 |