பக்கம் எண் :

571

விளக்கம்

எய்தியதுவிலக்கல்-ஈறுகெட்டு வன்கணம்வரின் மிக்கும், ஏனைக்கணம்வரின் இயல்பாகவும் 129ஆம் நூற்பாப்படிப் புணரும் என்பதனை நீக்கியது.

பிறிதுவிதி-ஈறுகெட்டு வலிமெலி உறழ்தல்,

அல்வழிக்கண் எய்தியது-ஈறுகெட்டு வன்கணம்வரின் மிக்கும், ஏணைக்கணம்வரின் இயல்பாகவும் புணரும் என்பது; அதனை விலக்கியது-இயல்பாகப் புணரும் என்பது’

குளக்கரை குளங்கரை-வழக்கில் மிகுதியும் பயில்வது.

குளச்சேறு குளஞ்சேறு-வழக்கில் மிகுதியும் பயிலாதது.

சண்பகக்கோடு சண்பகங்கோடு-செய்யுட்கண் மாத்திரம் வருவது.

மரமடைந்தது-வலிது-இயல்புப் புணர்ச்சி.

‘மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே

செல்வழி அறிதல் வழக்கத் தான, தொல். 312

என்ற நூற்பா உரையில் ‘குளங்கரை குளக்கரை-சேறு-தாது-பூமி-எனவரும். இவற்றுள் குளங்கரை குளக்கரை போல அல்லன ஒத்த உறழ்ச்சியாய் வழங்கா என்பதற்குச் ‘செல்வழி அறிதல்’ என்றார், சண்பகங்கோடு என்பது ‘வழக்கிடத்துச் செல்லாது’ என்றும் ‘அல்வழி எல்லாம் மெல்லெழுத்தாகும்’ (தொல். 314) என்னும் நூற்பாவில் ‘எல்லாம்’ என்ற மிகையால், இயல்புகணத்துக்கண் மகரம் கெடாமையும் கொள்க. மரம்யாது-வலிது-அடைந்தது-எனவரும் என்றும் நச்சினார்க்கினியர் கூறியவற்றை இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.