பக்கம் எண் :

572

ஒத்த நூற்பாக்கள்:

‘மெல்லெழுத்து உறழும் மொழியுமா ருளவே
செல்வழி அறிதல் வழக்கத் தான்.           தொல். 312

‘அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும்.’           தொல். 314

முழுதும்           நன். 220

‘மெல்லினம் உறழ்சில மொழிகளும் உளவே,           மு.வீ.பு. 153

‘அகம்’ முன்செவி, கை

131 அகம்முனர்ச் செவிகை-வரின்இடை யனகெடும்

இஃது எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்.) அகம் என்னும் சொல் முன்னர்ச் செவி கை என்னும் சொற்கள் வரின், நிலைமொழி இடைநின்ற உயிரும் மெய்யும் கெட்டு முன்போல வன்மைக்கு இனமாய்த் திரிந்து முடியும் என்றவாறு,

வரலாறு:

‘அஞ்செவி நிறைய மந்திரம் ஓதி’ எனவும்,

‘அங்கையுள் நெல்லி அதன்பயம்’           (பு. வெ. மா. 34) எனவும் வரும்.

‘செவிகை’ என்ற முறை அலகூற்றானே, அகஞ்செவி அகங்கை எனக் கெடாமையும் கொள்க. இவை பண்புத்தொகை. 13

விளக்கம்

எய்தியது -ஈறு வன்மைக்கு இனமாத்திரிதல் (129) சிறப்பு விதி- இடை நின்ற உயிரும் மெய்யும் கெடுதல் நெடுங்கணக்கு முறைப்படி ககர வருக்கமாகிய