573 கையினை முற்கூறுதல்வேண்டும்; பின்னரே செவி என்பதனைக் கூறுதல் வேண்டும். அங்ஙனம் கூறாததனால் பொது விதிப்படி (129) அகங்கை அகஞ்செவி என வருதலும் கொள்ளப்படும். அஞ்செவி அகமாகிய செவி; அங்கை- அகமாகிய கை எனப் பண்புத் தொகையாயின. அங்கை என்பதனைப் பண்புத்தொகை என்றும், ‘அதிகாரத்தானும் பொருள் நோக்கத்தானும் வேற்றுமைத்தொகை-அன்மை உணர்க’ என்றும் நச்சினார்க்கினியர் (தொல். 315) குறிப்பிட்டுள்ளார். ‘செவி எனச் சகரத்தை முற்கூறினார். ‘அஞ்சிறைத் தும்பி’ (குறுந்.2) என வருதலின் என்க. இடையன கெட்டே வரும் என நியதி கூறாமையின், அகஞ்செவி அகங்கை, அகஞ்சிறை என வருதல் விலக்கப்பட்டன அல்ல என்க. நகர்ப்புறம் என்பதனைப் புறநகர் என்றாற்போலச் செவியகம், கையகம் என்னும் இடஉறுப்புத் தற்கிழமைப் பெயரோடு முடிந்த ஆறாம் வேற்றுமைத்தொகைச் சொல்லை முன்பின்னாக வழங்கலின், இவ்விரண்டும் இலக்கணப்போலியாய்த் தழா அத்தொடராய் அல்வழியுள் ஒன்றாம் என்க. ‘அகஞ்சிறை என்பது ஏனையவற்றின் சிறைபோலப் புறத்தின் கண்ண அன்றி அகத்தின்கண்ண ஆகலின் ஏழாம் வேற்றுமைத்தொகை’ என்பது நன்னூல் விருத்தியுரை. (நன். 222) ஒத்த நூற்பாக்கள்: ‘அகம்என் கிளவிக்குக் கைமுன் வரினே முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும் வரைநிலை இன்றே ஆசிரி யர்க்க மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான.’ தொல். 315 முழுதும் நன்.222 மு. வீ. பு. 156 ‘அகம் என்புழிச் சார்ந்த.......இடைப் போவதுஉயிர் மெய்என்றே போற்று.’ நே. 23 |