பக்கம் எண் :

574

ஈம் முதலியவற்றின் முடிபு

132 ஈமும், கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும்
முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே.

இது மகரவீற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

(இ-ள்.) ஈமும் கம்மும் உருமும் ஆகிய மூன்று பொருட்பெயரும் முற்கூறிய தொழிற்பெயர்போல உகரம் பெற்று வன்மை மிக்கும், மென்மையும் வகரமும் வர இயல்பாயும் இரு வழியும் முடியும். அவற்றுள் ஈமும் கம்மும் வேற்றுமைக்கண் உகரம் பெறுதலே அன்றி அகரமும் பெற்று அவ்வாறு முடியும் என்றவாறு.

வரலாறு: ஈமுக்கடிது கம்முக்கடிது உருமுக்கடிது- சிறிது- தீது- பெரிது- ஞான்றது-நீண்டது- மாண்டது வலிது எனவும்.

ஈமுக்கடுமை-சிறுமை-தீமை-பெருமை-ஞாற்சி-நீட்சி-மாட்சி-வலிமை எனவும,

ஈமக்குடம் கம்மக்குடம்-சாடி-தூதை-பானை-ஞாற்சி-நெருப்பு-மாட்சி-விறகு எனவும் முறையே காண்க.

பெரும்பாலும் உகரப்பேறு குணவேற்றுமைக் கண்ணும் அகரப்பேறு பொருட் புணர்ச்சிக்கண்ணும் கொள்க.

ஈம்-சுடுகாடு; கம்-தொழில்; உரும்-இடி.

அம்மு தம்மு நும்மு எனச்சாரியை இடைச்சொல் உகரம் பெற்று முடிதலும்.

மரவடி குளவாம்பல் என முடிவன வருமொழி முதற்கண் நின்ற அகரமும் ஆகாரமும் நிலைமொழி ஈற்றுமகரமும்