575 கெட்டு, ரகர ளகரங்களின்மேல் நின்ற அகரம் ஆகாரமாய் மராடி குளாம்பல் என முடிதலும், ககர வகரங்கள் வந்துழியும் ஈறுகெட்டு ஈற்றுமிசை அகரம் நீண்டு கோணாகோணம் கோணாவட்டம் என முடிதலும், வருமொழி வல்லெழுது மிகாமையும் மேலைச் சூத்திரத்துப் ‘பிற’ என்ற மிகையானே முடித்துக்கொள்க. இவற்றிற்கு உள் என்னும் பொருள்பட வந்த சுண் என்னும் உருபு விரிக்க. நுஞ்ஞாண் தஞ்ஞாண் எஞ்ஞாண் நஞ்ஞாண் -நூல் என நும் தம் நம் என்பனவற்று இறுதி வருமொழி ஞநக்களாகத்திரிதலைப் ‘பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்கள் ஈற்றுமெய்’ (71) என்னும் சூத்திரத்து முறைஅல கூற்றானே முடித்துக்கொள்க. 14 விளக்கம் எய்தியது-மவ்வீறு ஒற்றழிந்து உயிர் ஈறு ஒத்தலும் வன்மைக்கு இனமாகத்திரிதலும் 129 பிறிதுவிதி-தொழிற்பெயர் போல உகரமும், வன்கணம் வரின் வல்லெழுத்தும் பெறுதலும், ஈமும்கம்மும் வேற்றுமைக்கண் உகரமேயன்றி அகரமும் பெறுதலும் என்பன. ஈமுக்கடிது-அல்வழிக்கண் உகரமும் வல்லெழுத்தும் பெற்றது. ஈமுக்கடுமை-குணவேற்றுமைக்கண் உகரமும் வல்லெழுத்தும் பெற்றது. ஈமக்குடம்-பொருள் வேற்றுமைக்கண் அகரமும் வல்லெழுத்தும் பெற்றது. |