பக்கம் எண் :

576

அம், தம், நும் என்ற சாரியை இடைச்சொற்கள் வேறு, அழகை உணர்த்தும் அம் என்பதும், தாம் நீயிர் என்பனவற்றின் திரிபாகிய தம் நும் என்பனவும் வேறு என்பது உணர்க.

அம் தம் நும் என்ற சாரியை அம்மு தம்மு நும்மு என உகரச் சாரியை பெறுதலை ‘படர்க்கைப்பெயரும் முன்னிலைப் பெயரும்’ தொல். 320 என்ற நூற்பா உரையில் உடம்பொடு புணர்த்தும்,

‘அகர ஆகாரம் வரூஉங் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே’           தொல். 311

என்ற நூற்பாவில் மராஅடி குளாஅம்பல் என்பனவற்றை எடுத்துக்காட்டியும், அந்நூற்பாவில் வருமொழி முற்கூறிய அதனால் கோணாகோணம் கோணாவட்டம் என்பனவற்றை முடித்தும், ‘அவற்றிற்கு உள் என்னும் உருபுவிரிக்க’ என்று கூறியும், கோணா கோணத்திற்கு வருமொழி வல்லெழுத்துக் கேடு ‘செல்வழி’ தொல், 312 என்ற மிகையாற்கொண்டும், ‘நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே’ தொல். 325 என்ற நூற்பா உரையுள் நுஞ்ஞாண் நுந்நூல் என்பன வற்றை எடுத்துக்காட்டியும், தொடக்கங்குறுகும் தாம்யாம், நாம் என்பனவற்றிற்குப் ‘படர்க்கைப்பெயரும்’ தொல். 320 என்பதனால் மெல்லெழுத்து மிகுத்தும் தஞ்ஞாண் தந்நூல் எஞ்ஞாண் எந்நூல், நஞ்ஞாண் நந்நூல் என முடித்தும் நச்சினார்க்கினியர் உரைத்தன யாவும் இவ்வாசிரியர் கொண்டுள்ளார். வழக்கம்போலப் பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்கள் பற்றியவனவற்றை 71ஆம் நூற்பாவால் முடித்துள்ளார். தொல்காப்பியனாருக்கு நும் என்பதே இயற்பெயர், நீயிர் என்பது அதன் திரிபு என்பது கருத்து, தொல். 326.

நச்சினார்க்கினியர் ‘கோணாகோணம் கோணாவட்டம் என்பனவற்றிற்கு உள் என்னும் உருபு விரிக்க’ என்றார். இவர் ‘உள் என்று பொருள்படும் கண் என்உருபு விரிக்க’ என்றார். இவருக்குக் ‘கண் கால் புறம் அகம்’ இ. வி. 204