577 என்பன ஏழன் உருபின் பொருள்பட வரும் சொற்கள்’ என்ற சேனாவரையர் கருத்தே உடன்பாடாதல் இதனால் பெறப்படும். இதன் விளக்கத்தைச் சொற்படலத்தில் உணர்க. ஒத்த நூற்பாக்கள்: ‘ஈமும் கம்மும் உரும்என் கிளவியும் ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன தொல். 328 ‘வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும் தோற்றம் வேண்டும் அக்கு என்சாரியை’ 329 ‘அகர ஆகாரம் வரூஉங் காலை ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே 311 ‘தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவி........ மெல்லெழுத்து மிகுதல் ஆவயி னான’ 320 ‘நும்என் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே’ 325 ‘ஈமும், கம்மும் உருமும் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக்கு அவ்வும் பெறுமே’ நன். 223 ‘நும்தம், எம்நம் ஈறாம்ம-வரும் ஞநவே.’ 221 ‘ஈம்கம் உரூம்உக ரத்தொடு நிலையும்,’ மு.வீ.பு.160 ‘ஈம்கம் அக்கையும் ஏற்கும் என்ப,’ 161 ‘அஆ வரின்ஈற் றயல்நீ டலுமாம்.’ 152 யகர ரகர ழகர ஈற்றிமுன் வன்கணம் 133 யரழ முன்னர்க் கசதப அல்வழி இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை மிகலும் இனத்தொடு உறழ்தலும் விதிமேல் இது யகர ரகர ழகர ஈறுகள் வன்கணத்தொடு புணருமாறு கூறுகின்றது. |