பக்கம் எண் :

578

இ-ள்: யகர ரகர ழகர ஈற்றுச் சொற்களின் முன்வரு மொழி முதற்கண் நின்ற கசதபக்கள் அல்வழிக்கண் இயல்பாயும் மிக்கும் முடிதலும், வேற்றுமைக்கண் மேல்வந்த வல்லெழுத்து மிக்கும் தன் இன மெல்லெழுத்தோடு உறழ்ந்தும் முடிதலும் விதியாம் என்றவாறு.

வரலாறு: நாய் நீர் யாழ் குறிது-சிறிது-பெரிது என மெய்க்கடவுள்- பொய்ச்சொல்-மெய்த்தெய்வம்- எய்ப்பன்றி, பார்க்கன்னி-தார்ச்சேனை-சூர்த்தெய்வம்-கார்ப்பருவம், தாழ்க்கோல்-கூழ்ச்சோறு- வீழ்த்தூணம்-பூழ்ப்புள்-எனவும் அல்வழிக்கண் முறையே இயல்பாயும் மிக்கும் முடிந்தன.

தகர்க்குட்டி, புகர்ப்போத்து என்றாற் போல்வன பண்புத்தொகை கருதின அவையும் கொள்க.

நாய்க்கால்-செவி-தலை-புறம், தேர்க்கால்-செலவு தலை-புறம்,பூழ்க்கால்-சிறகு-தலை-புறம் எனவும்,

வேய்க்குறை வேய்ங்குறை, வேர்க்குறை வேர்ங்குறை வீழ்க்குறை வீழ்ங்குறை-செய்கை-தலை-புறம் எனவும்,

வேற்றுமைக்கண் முறையே மிக்கும் உறழ்ந்தும் முடிந்தன. பாழ்க்கிணறு-சேரி-தோட்டம்-பாடி இதுவும் அது. பாழுட்கிணறு என விரியும்

‘மேல்’ என்ற மிகையானே.

‘வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்’           புறநா. 184-4

‘தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்’           அக. நா. 8-3

என வேற்றுமைக்கண் இயல்பு ஆதலும்,

‘வேய்கடிது வேய்க்கடிது’ வேர்குறிது வேர்க்குறிது வீழ்குறிது வீழ்க்குறிது-சிறிது-தீது-பெரிது என அவ்வழிக்கண் உறழ்தலும்.