579 ஆர்ங்கோடு வெதிர்ங்கோடு சார்ங்கோடு பீர்ங்கோடு-செதிள்-தோள்-பூ என வேற்றுமைக்கண் மெல்லெழுத்து மிகுதலும், ‘ஆரங்கண்ணி அடுபோர்ச் சோழர்’ அகநா. 93-4 என ஆர் அம்முப் பெறுதலும், ‘மாரிப் பீரத்து அலர் கொண்டே’ குறுந் 98-5 எனவும் பீரங்கொடி எனவும் பீர் அத்துப் பெறுதலும் அம்முப் பெறுதலும் துவரங்கோடு எனத்துவர் அம்முப் பெறுதலும் சார்க்காழ் எனச் சார் காழொடு புணர்வழி வல்லெழுத்து மிகுதலும், குமிழ்ங்கோடு குமிழங்கோடு மகிழ்ங்கோடு மகிழங்கோடு என ழவ்வீற்று மரப்பெயர் மெல்லெழுத்தும் அம்மும் பெற்று உறழ்தலும். தாழப்பாவை என அல்வழிக்கண் அகரம் பெறுதலும் இன்னோரன்ன பிறவும் கொள்க. இன்னும் அதனானே, யகர ஈறு யகரத்தின் முன்னர் வேயாது வேயாப்பு என இருவழியும் கெடுதலும் கொள்க. விளக்கம் நாய்குறிது, நீர்குறிது, யாழ்குறிது-அல்வழிக்கண் எழுவாய்த்தொடராய் யகர ரகர ழகர ஈற்றுச்சொற்கள் வருமொழியொடு இயல்பாகப் புணர்ந்தன. மெய்க்கடவுள், பார்க்கன்னி, தாழ்க்கோல்-அல்வழிக்கண் இருபெயரொட்டுப் பண்புத் தொகைகள் மிக்குப் புணர்ந்தன. தகர்க்குட்டி-தகராகியகுட்டி-புகர்ப்போத்து புகராகிய போத்து என்று கொள்ளப்படின், இவையும் அல்வழிக்கண் |