பக்கம் எண் :

580

இருபெயரொட்டுப் பண்புத்தொகையாய் மிகும் என்க; தகரது குட்டி புகரை உடைய போத்து எனின். வேற்றுமைப் புணர்ச்சியாய் மிகும் என்க.

நாய்க்கால் தேர்க்கால் பூழ்க்கால் முதலியன வேற்றமைக்கண் வன்கணம் வர மிக்கன,

வேய்க்குறை வேய்ங்குறை என்றாற்போல்வன வல்லெழுத்தும் இனமெல்லெழுத்தும் உறழ்ந்தன,

பாழ்க்கிணறு-பாழினுட்கிணறு என ஏழாம் வேற்றுமைப் பொருள்படும் தொடர்.

வாய்ப்புகுவது என்பதும் உகிர்க்கதுவலின் என்பதும் செய்யுட்கண் வலி மிகாது வாய்புகுவது எனவும் உகிர்கதுவலின் எனவும் இயல்பாயின.

வேய்கடிது வேய்க்கடிது முதலியன அல்வழிக்கண் உறழ்ச்சி.

ஆர்ங்கோடு முதலியன வருமொழி வன்கணத்துக்கு இனமான மெல்லெழுத்துப் பெற்றன.

ஆரங்கண்ணி என்பது அம்முச்சாரியை பெற்றது. துவரங்கோடு என்பதும் அது. பீரத்து அலர் பீரங்கொடி எனப் பீர் என்பது அத்தும் அம்மும் பெற்றது சார்க்காழ் இருவழியும் வல்லெழுத்து மிக்கது. சாராகியகாழ் சாரினதுகாழ் என விரிக்க.

குமிழ், மகிழ் என்பன மெல்லெழுத்தும் அம்முச்சாரியையும் பெற்று முடிந்தன.

தாழப்பாவை-தாழ் அல்வழிக்கண் அகரச்சாரியை பெற்றுப் புணர்ந்தது என்ப. தாழாகிய பாவை என விரிக்க.