பக்கம் எண் :

583

‘...........யவ்வொடு ரழ
ஈறா வரின்வன்மை பின்பில்வர்க் கத்தொற்று இடைப்படுமே.’           வீ. 14

‘..................யழரக்கள்
நிற்கப்பின் வல்லெழுத்து நேருமேல் ஒற்றாம்
பிணைந்த வருக்கம்.’           நே. 15

‘யரழ முன்னர்க் கசதப அல்வழி
இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை
மிகலும் இனத்தொடு உறழ்தலும் விதிமேல்.’           நன். 224

‘யரழமுன் வலிவரின் அல்வழிக்கு இயல்பும்
அடைமொழிக்கு ஆக்கமும் அவைவேற் றுமைக்கண்
மிகலும் தன்னினம் மெலிபெய் தலுமாம்.’           தொ.வி. 30

‘மெல்லினம் உறழ்தரு மொழிகளும் உளவே’           மு. வீ. பு. 186

‘வேற்றுமை அல்வழி யகரஈறு இயல்பே’      183

‘வெதிர் ஆர் பீர்சார் மெல்லெழுத்து மிகுமே’      187

‘காழ்வரின் சார்மிகும் கருதுங் காலே.’      189

‘பீர்என் கிளவி அம்மொடு சிவனும்.’      188

‘குமிழ்என் கிளவி அம்மொடு சிவனும்’      213

‘பாழ்என் கிளவி மெல்லெழுத்து உறழும்.’      214

ழகரஈற்றுச் சிறப்புவிதி 134-136
தமிழ் தாழ் -சிறப்புவிதி.

134 தமிழ்அ உறவும் பெறும்வேற் றுமைக்கே
தாழும் கோல்வந்து உறுமேல் அற்றே.

இ-து: எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுகின்றது.