584 இ-ள்: தமிழ் என்னும் சொல் வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுதலேயன்றி, அகரமும் பெற்று முடியும்; தாழ் என்றும் சொல் கோல் என்னும் சொல் வந்து புணரின் தமிழ் என்னும் சொல்போல வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுதலே அன்றி அகரமும் பெற்றுமுடியும் என்றவாறு. வரலாறு: தமிழ்க்கூத்து-சேரி-தோட்டம்-பள்ளி-நாடு-வரை-அரசு எனவும், தாழ்க்கோல் எனவும் முறையே காண்க. உம்மையான், தமிழ்க்கூத்து தாழ்க்கோல் என அகரம் பெறாது வல்லெழுத்து மிகுதலே வலியுடைத்து. இமை தமிழை உடைய கூத்து. தாழைத்திறக்குங்கோல் என விரியும். 16 விளக்கம் எய்தியது-வேற்றுமைக்கு மிகலும் இனத்தொடு உறழ்தலும்.(133) சிறப்புவிதி-அகரச்சாரியையும் பெறுதல். எனவே தமிழ்க்கூத்து தமிழக்கூத்து தாழ்க்கோல் தாழக்கோல் என்ற இருமுடிபும் கொள்க. தாழக்கோல் என்பதனைக் தாழைத் திறக்குங்கோல் என்றே நச்சினார்க்கினியரும் விரித்துள்ளார், (தொல். 384) தமிழக்கூத்து-தமிழை உடைய கூத்து எனவிரிக்க, (தொல். 385. நச்) ‘அவ்வுறவும்’ என்ற எதிரது தழீஇய எச்சஉம்மையானே தமிழின் சுவை என இன்சாரியை பெறுதலும் கொள்க. தாழக்கோல் எனினும் திறவுகோல் எனினும் அமையும். தாழைத்திறக்கும்கோல் என விரியும். தாழாகிய கோல் என ஒரு பொருட்கு இருபெயரொட்டு ஆக்கலும் ஒன்று.’ (நன். 225 விருத்தி) |