பக்கம் எண் :

585

ஒத்த நூற்பாக்கள்:

‘தாழ்என் கிளவி கோலோடு புணரின்
அக்கு இடைவருதல் உரித்தும் ஆகும்.’           தொல். 384

‘தமிழ்என் கிளவியும் அதனோ ரற்றே.’      385

முழுதும்           நன். 225

‘தமிழ்வேற் றுமைக்குஅ-சாரவும் பெறுமே.’           தொ.வி. 34

‘தாழ்முன் கோல்தரின் அக்கொடு சிவனும்.’           மு. வீ. பு. 211

‘தமிழும் அவற்றோ ரற்றா கும்மே.’           மு. வீ. பு. 212

‘கீழ்’ முன் வன்கணம்

135கீழின்முன் வன்மை விகற்பமும் ஆகும்.

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது,

(இ-ள்.;) கீழ் என்னும் சொல்முன் வல்லெழுத்து ஒரு கால்மிக்கும் ஒருகால் மிகாதும் உறழ்ந்து முடியும் என்றவாறு.

அதிகாரத்தின் இம்முடிபு வேற்றுமைக்கண்ணது எனக் கொள்க.

வரலாறு: கீழ்குளம் கீழ்க்குளம்-சேரி-தோட்டம்-பாடி எனவரும்.

விளக்கம்

எய்தியது-மிகலும் இனத்தொடு உறழ்தலும் (133)
பிறிதுவிதி-வன்மை விகற்பமும் ஆகும் என்பது.

கீழ்குளம் கீழ்க்குளம் முதலியவற்றையே நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். (தொல். 398) உரையாசிரியர்