பக்கம் எண் :

586

இவற்றொடு கீழுகுளம்-சேரி-தோட்டம்-பாடி என்பனவும் எடுத்துக்காட்டுகிறார். (தொல். 396) மயிலைநாதர் கீழ்க்குளம் கீழ்குளம்-சேரி-துறை-பாடி என எடுத்துக்காட்டுக்கள் தருகிறார். (நன்.225) நன்னூல் விருத்தி உரைகாரர் கீழக்குலம்-சாதி-என எடுத்துக்காட்டி, ‘கீழிருந்தும் - கீழல்லார் கீழல்லவர் (குறள். 973) என்றாற்போலக் கீழ் என்பது பண்பாகுபெயராய் இத்தொடர் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாம் என்க’ என்றார். (நன். 226)

ஒத்த நூற்பாக்கள்:

‘கீழ்என் கிளவி உறழத்தோன்றும்.’           தொல்.396

முழுதும்           நன், 296           மு.வீ.பு.218

‘ஏழ்’ முன் எண்ணுப்பெயர்ப்புணர்ச்சி

136 ஏழ் என் -கிளவி ஆறுஇயல் நிலையும்
உகரம் வருதல் ஆவயி னான.

இஃது ஏழ் என்னும் எண்ணுப்பெயர் எண் முதலிய நாற்பெயரொடு புணருமாறு கூறுகிறது.

(இ-ள்.) ஏழ் என்னும் எண்ணுப்பெயர் எண் முதலியவற்றொடு புணர்வுழி, ஆறு என்னும் எண்ணுப்பெயர் போல நெடுமுதல் குறுகும் இயல்பின்கண் நிலைபெற்று முடியும்; அவ்வழி ஏற்புழி உகரம் வந்து புணர்தலும் ஆம் என்றவாறு.

வரலாறு: எழுமூன்று-கழஞ்சு-கலம்-கடல் என நெடுமுதல் குறுகி உகரம் பெற்றும்.

எழாயிரம் ஏழாயிரம் என உகரம் பெறாது நெடுமுதல் குறுகியும் குறுகாதும்,

ஏழ்ஒன்று-ஏழ்தாமரை-ஏழ்நூறு-ஏழ்வெள்ளம்-ஏழாம்பல்-ஏழகல் என இயல்பாயும் தனக்கு ஏற்றபெற்றி முடிந்தவாறு காண்க. 18