587 விளக்கம் ‘ஏழ்’ என்பதனை ழகரஈற்று எண்ணுப் பெயராகவே கொண்ட இவ்வாசிரியர் இதனை ஏனை எண்ணுப்பெயர்களோடு புணர்த்துக் கூறாது தொல்காப்பியனார்போல ழகர ஈற்றுப் புணர்ச்சிக்கண் குறிப்பிடுகின்றார். தாமரை, வெள்ளம், ஆம்பல் என்பன பேரெண்கள். தொல்காப்பியனார் கோடி என்ற எண்ணைக் குறிப்பிடவில்லை. ஆனால் சங்கச் செய்யுட்களில் ‘நூற்றுப்பத்தடுக்கிக் கோடி கடை இரீஇய’ புறநா, 18-5 என்றாற்போல் அச்சொல் வந்துள்ளமை காண்க, எழுமூன்று.....எழுகலம் - தொல். 389; இந்நூற்பா மிகையான், எழுகடல் முதலிய பொருட்பெயர்ப்புணர்ச்சியும் நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார், எழாயிரம் - தொல். 391 ஏழாயிரம் - 392-‘கூறிய’ என்றமிகை-நச். ஏழ்தாமரை, ஏழ்வெள்ளம்,ஏழாம்பல்-தொல்,393 ஏழகல் - தொல். 394 ஒத்த நூற்பாக்கள்: ‘அளவும் நிறையும் எண்ணும் வருவழி நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலும் கடிநிலை இன்றே ஆசிரி யர்க்க.’ தொல். 389 ‘ஆயிரம் வருவழி உகரம் கெடுமே,’ 391 ‘ஐஅம் பல்என வரூஉம் இறுதி அல்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்.’ 393 ‘உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.’ 394 ‘எண்நிறை அளவும் வரூஉங் காலை குறுகலும் உகரம் வருதலும் உரிய.’ மு. வீ. பு. 216 ‘ஆயிரம் வரின் கெடும் உகரச் சாரியை.’ 217 |