588 லகல ளகர ஈற்றுச் சிறப்பு விதி 137-139 லகர ளகர ஈற்றின்முன் முக்கணம் 137 லளவேற் றுமையில் றடவும் அல்வழி அவற்றோடு உறழ்வும் வலிவரின் ஆம்மெலி மேவின் னணவும் இடைவரின் இயல்பும் ஆகும் இருவழி யானும் என்ப. இது லகர ளகர ஈறுகள் இருவழியும் முக்கணத்தொடும் புணருமாறு கூறுகின்றது. (இ-ள்.) லகரளகர ஈறுகள் வன்கணம் வரின் வேற்றுமைக்கண் முறையே றகரடகரங்களாய்த் திரிதலும் அல்வழிக்கண் தம் திரிபு வல்லெழுத்தினொடு உறழ்தலும் பொருந்தும் மெல்லெழுத்து வந்து புணரின் முறையே ணகரணகரங்களாத்திரிதலும் இடையெழுத்துவரின் இயல்பாதலும் பொருந்தும் இருவழிக்கண்ணும் என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு. (எ-டு.) கற்குறை முட்குறை-சிறை-தலை-புறம் எனவும் கல்குறிது கற்குறிது முள்கடிது முட்கடிது-சிறிது-தீது-பெரிது எனவும், கன்ஞெரி முண்ஞெரி-நுனி-முரி-எனவும், கன்ஞெரிந்தது முண்ஞெரிந்தது-நீண்டது-மாண்டது எனவும், கல்யாப்பு முன்யாப்பு -வலிமை எனவும் கல்யாது முன்யாது-வலிது-எனவும் முறையே காண்க. ஏற்புழிக் கோடலான் கற்றீது முட்டீது எனக் குறியதன் இறுதியும். |