589 பெயர்ச்சொல் தொகுமாறு ‘பேசுவெஞ் சொற் றீதென்றேவிடு’, புழுங்கற்றோரை எனத் தொடர்மொழி இறுதியும் அல்வழிக்கண்ணும் தகரம் வருவழி உறழாது திரிதலே கொள்க; லகரளகரங்களொடு தகரம் மயங்குதல் ஏலாமையின், விளக்கம் கற்குறை-வேற்றுமைக்கண் வலிவரின் லகரளகரங்கள் றகரடகரங்களாயின கல்குறிது கற்குறிது முள்குறிது முட்குறிது-அல்வழிக்கண் இயல்பாதலும் திரிதலும் லகரளகரங்கள் பெற்றன. கன்ஞெரி மூண்ஞெரி கன் ஞெரிந்தது முண்ஞெரிந்தது மெலிவரின் வேற்றுமை அல்வழி ஆகிய இருவழியும் லகர ளகரங்கள் முறையே னகரணகரங்கள் ஆயின. கல்யாப்பு முள்யாப்பு| இடைவரின் லகரளகரங்கள் கல்யாது முள்யாது | இருவழியும் இயல்பாயின கல்+தீது, முள்+தீது-கற்றீது, முட்டீது-குற்றெழுத்தை அடுத்த லகர ளகரங்கள் முறையே றகர டகரங்களாகத் திரிந்தன. அவற்றொடு தகரம் மயங்காமையின் மயங்குதற்குரிய றகர டகரங்களாகத் தகரம் திரிந்தமை காண்க. வெஞ்சொல்+தீது-வெஞ்சொற்றீது எனத் தொடர் மொழி இறுதிக்கண்ணும் லகரம் றகரமாகவும் வருமொழித் தகரம் றகரமாகவும் திரியும்நிலை ஏற்பட்டமை காண்க. புழுங்கல்+தோரை புழுங்கற்றோரை இருபெயரொட்டு இதன்கண்ணும் நிலைமொழி வருமொழித்திரிபு காண்க. இவை ஏற்புழிக் கோடலான் கொள்ளப்பட்டன. |