பக்கம் எண் :

592

‘லகரம்வேற் றுமைக்கண் றகாரம் ஆகும்.’           மு. வீ. பு. 190

‘மெல்லெழுத்து இயையின் னகரம் ஆகம்.’      191

‘அல்வழி எல்லாம் உறழும் என்ப.’      192

‘ளகாரம் டகாரமாம் வேற்றுமைப் பொருட்கே
மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும்.’      220

‘அல்வழி எல்லாம் உறழ்வா கும்மே.’     221

அல்வழியில் குறில்வழி லளமுன் வன்கணம்

138 குறில்வழி லள-த அணையின் ஆய்தம்
ஆகவும் பெறூஉம் அல்வழி யானே.

இஃது; எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்.) குற்றெழுத்தின் பின்நின்ற லகரளகரங்கள் தகர முதல்மொழி வந்துபுணரின் றகர டகரங்களாய்த்திரிதலே அன்றி’ ஆய்தமாய்த் திரியவும் பெறும் அல்வழிக்கண் என்றவாறு.

வரலாறு: கற்றீது கஃறீது முட்டீது முஃடீது என வரும்.

விளக்கம்

எய்தியது-அல்வழியில் ஈறுதிரியும் எனக்கொண்டது.

ஒத்த நூற்பாக்கள்:

‘தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகர்இன்று என்மனார் புலமை யோரே.’           தொல். 369

‘ஆய்தம் நிலையலும் வரைநிலை இன்றே
தகரம் வரூஉம் காலை ஆன.’      399