பக்கம் எண் :

593

முழுதும்           நன். 228

‘தனிக்கு றில்கீழ் அல்வழி தவரின்
திரிந்தொழிந்து ஆய்தம் சேரும் என்ப.’           தொ.வி. 26

‘தகரம் வரும்வழித் தனிநிலை ஆகும்.’           மு. வீ. பு. 193, 222

குறில் அணையா லகர ளகரங்கட்குச் சிறப்புவிதி

139 குறில்செறி யாலள அல்வழி வந்த
தகரம் திரிந்தபின் கேடும்ஈ ரிடத்தும்
வரும்ந திரிந்தபின் மாய்வும் வலிவரின்
இயல்பும் திரிபும் ஆவன உளபிற.

இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.

(இ-ள்.) குற்றெழுத்தினைச் சாராது ஒருமொழி தொடர் மொழிகளைச் சார்ந்த லகர ளகரங்கள் அல்வழிக் கண் வருமொழித் தகரம் திரிந்த பின்னர்க் கெடுதலும் இருவழியும் வருமொழி நகரம் திரிந்த பின்னர்க் கெடுதலும் இரு வழியும் வருமொழி நகரம் திரிந்த பின்னர்க் கெடுதலும் வல்லெழுத்து வரின் அல்வழிக்கண் உறழாது இயல்பு ஆதலும் திரிதலும் வேற்றுமைக்கண் திரியாது இயல்பு ஆதலும் பொருந்துவன உள என்றவாறு.

வரலாறு: வேறீது விரறீறு ஆரறீது கருங்கோறீது எனவும், வாடீது தேடீது பொருடீது நெஞ்சுடீது எனவும்,

வேனன்று குரனன்று குழனன்று செங்கனன்று மைப்புனன்று எனவும்,

வாணன்று நாணன்று பொருணன்று நெஞ்சுணன்று எனவும்,

நன்மை எனவும்,