594 பால்கடிது தோள்கடிது-சிறிது-தீது-பெரிது-எனவும், புழுங்கற்கறி-சோறு-பயறு, அழுங்கற்காய்-சோறு சழங்கற்கூரை, ஆரற்சுவர், புழற்காலாம்பல், புலிவிற் கெண்டை, வந்தாற் கொள்ளும், வந்தக்காற்கொள்ளும்- செல்லும்-போம்-எனவும். ‘ஏனல் காவல் இவளும் அல்லள்’ தொல். பொ. 114 உரை ‘ஏனல் காவல் ஆயினள் எனவே’ நற். 102-9 ‘அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந்திட்ட’ புறநா. 246-4 ‘நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கென வாள்போழ்ந் தடக்கலும் உய்ந்தனர் மாதோ’ புறநா. 93,10,11 எனவும் முறையே காண்க. ளகர ஈறு அல்வழிக்கண் உறழாது திரிந்து முடிதல் வந்துழிக்காண்க. ‘பிற’ என்ற மிகையானே. கல்குறுமை கற்குறுமை முள்குறுமை, முட்குறுமை. கோள்கடுமை கோட்கடுமை -வாள்கடுமை, வாட்கடுமை எனக்குண வேற்றுமைக்கண் உறழ்தலும், வேறீது வேற்றீது-வாடீது வாட்டீது-என நெடிய தன் இறுதி அல்வழிக்கண் கெட்டும் திரிந்தும் உறழ்தலும். விழன்காடு-சேறு-தாள்-புறம் என லகர ஈறு வேற்றுமைக்கண் றகரம் ஆகாது னகரமாய்த்திரிதலும், நூற்கடல் நூல்சிற என அல்வழிக்கண் உறழாது ஓர் இடத்துத் திரிதலும் ஓர் இடத்துத் திரியாமையும் |