பக்கம் எண் :

595

முந்நாளை வாழ்வு முந்நாளைப் பரிசு ஒரு நாளைக் குழவி ஒரு திங்களைக்குழவி என ளகார ஈறு ஐகாரம் பெறுதலும்,

பூலங்கோடு உதளங்கோடு எனவும்

வெயிலத்துக் கொண்டான் வெயிலிற் கொண்டான் எனவும்,

இருளத்துக்கொண்டான் இருளிற்கொண்டான் எனவும்

முறையே வேற்றுமைக்கண் திரியாது அம்முப்பெறுதலும், அத்துப்பெறுதலும், இன்பெறுதலும், இன்னோரன்ன பிறவும் கொள்க.

மக்கட்கை-செவி-தலை-புறம் எனப் பெரும்பான்மை மக்கள் உடம்பு உயிர் நீங்கிக்கிடந்த காலத்தும், மக்கட் பண்பு எனச் சிறுபான்மை அங்ஙனம் அல்லாத காலத்தும் திரிதல் ‘சில விகாரமாம் உயர்திணை, 71 என்பதனால் முடியும். 21

விளக்கம்

எய்தியது-லள வேற்றுமையின் றடவும் அல்வழி அவற்றோடு உறழ்வும் வல்லெழுத்து வருவழிப் பெறுதலும் வருமொழிக்கண் மெலி மேவின் னணவாகத் திரிந்தும் இடைவரின் இயல்பாகவும் இருவழிக்கண்ணும் புணர்ச்சி உறுதலும் ஆகிய 137ஆம் நூற்பா விதி.

பிறிது விதி-குறில் செறியாதன அல்வழிக்கண் வரு மொழித்தகரம் திரிந்தபின் கெடுதலும், அல்வழி வேற்றுமை என்ற ஈரிடத்தும் வருமொழி நகரம் திரிந்தபின் கெடுதலும் அல்வழிக்கண் வலிவரின் இயல்பே ஆதலும், திரிபே ஆதலும், வேற்றுமைக்கண் இயல்பேயாதலும் பிறவும்.

வேல்+தீது-வேறீது | அல்வழிக்கண் தகரம் திரிந்த
முதலியன பின் லகரம் கெட்டமை.