597 விழன்காடு முதலியன-லகரம் றகரமாகாது னகரமாய்த் திரிதல். நூற்கடல் நூல்சில-அல்வழியிற்றிரிதலும் திரியாமையும். முந்நாளைக்குழவி முதலியன-ளகரம் ஐகாரச் சாரியை பெறுதல். பூலங்கோடு முதலியன-லளஈறு வேற்றுமைக்கண் அம்முச்சாரியை பெறுதல். வெயிலத்துக்கொண்டான் | லளஈறு அத்தும் இன்னும் முதலியன | வேற்றுமைக்கண் பெறுதல். மக்கட்கை | ளகரஈறு வேற்றுமைக்கண் திரிதல் மக்கட்பண்பு | மக்கள் என்பது உயர்திணைச் சொல் ஆதலின் இத்திரிபை உயர்திணைச்சொல் பற்றிய ‘சிலவிகாரமாம் உயர்திணை’ 71 என்ற நூற்பாவில் இவ்வாசிரியர் அடக்குகிறார். இவர் காட்டிய எடுத்துக்காட்டுக்கள் சில மயிலைநாதர் உரையைத் தழுவியும், பல தொல்காப்பியத்தையும் அதன் நச்சினார்க்கினியர் உரையையும் தழுவியும் வரையப் பட்டமை இனிக்காண்கம். வேறீது முதல் நெஞ்சுணன்று முடிய உள்ள எடுத்துக்காட்டுக்களில் நிலைமொழி ஈறுதிரிதலை ‘நெடியதன் முன்னர்’ தொல். 160 என்ற நூற்பாவில் குறியது பிற்கூறிய முறையன்றிக் கூற்றினால் நச்சினார்க்கினியர் கொண்டார். புழுங்கற்கறி முதல் புலிவிற் கெண்டை ஈறாகிய எடுத்துக் காட்டுக்கள் அல்வழிக்கண் திரிந்தே புணர்வதற்கு மயிலைநாதரால் காட்டப்பட்டன. நன்.228 |