பக்கம் எண் :

598

இவற்றுள் புழுக்கற் சோறு நச்சினார்க்கினியரால் அல்வழித்திரிபுக்குக் காட்டப்பட்டுள்ளது. தொல். 405

வந்தாற்கொள்ளும் முதலிய வினைச்சொல் ஈறுதிரிதலைத் தொல். 368ஆம் நூற்பாவில் ‘எல்லாம்’ என்ற மிகையாற் கொண்டார் நச்சினார்க்கினியர்.

ஏனல் காவல்.........வாள் போழ்ந்து அடக்கல்-இயல்பாகப் புணர்ந்தமைக்கு மயிலைநாதரால் காட்டப்பட்டுள்ளன. நன். 228

கல்குறுமை கற்குறுமை முதலாகக் குணம்பற்றி வந்த லகார ஈற்று வேற்றமைக்கண் உறழ்ச்சியும், முள்கடுமை முட்கடுமை முதலாக ளகார ஈற்று வேற்றுமைக்கண் உறழ்ச்சியும் தொல். 368, 398 ஆம் நூற்பாக்களில் ‘எல்லாம்’ என்ற மிகையால் நச்சினார்க்கினியரால் கொள்ளப்பட்டன.

வேறீது வேற்றீது எனவும், வாடீது, வாட்டீது எனவும் வந்த உழற்சி முடிவுள், தொல். 369ஆம் நூற்பாவின் ‘புகரின்று’ என்ற மிகையால் வேறீது, வேற்றீது என்ற லகர ஈற்று முடிபே நச்சினார்க்கினியரால் கூறப்பட்டுள்ளது.

விழல்+காடு-விழன்காடு என லகரம் றகரமாவது னகரமாகத் திரிந்து புணர்தல் தொல். 405இன் உரையில் நச்சினார்க்கினியர் குறித்துள்ளார்.

நூற்கடல், நூல் சில-என அல்லவழிக்கண் ஓரிடத்துக் திரிதலும் ஓரிடத்துத் திரியாமையும் நன். 228இல் மயிலைநாதரால் குறிப்பிடப்பட்டுள்ளன.

முந்நாளை வாழ்வு முதலிய ளகர ஈற்றுச் சொற்கள் ஐகாரம் பெற்றுப் புணர்தல் தொல். 405இன் உரையில் நச்சினார்க்கினியர் சுட்டுகிறார்.