599 பூலங்கோடு தொல். 375ஆம் நூற்பாவானும், உதளங் கோடு தொல். 400ஆம் நூற்பாவின் ‘போற்றல் வேண்டும்’ என்ற மிகையானும் கொள்ளப்படும். ‘உதள்’ மரமாயின் அம்மரக்கிளை என்ற பொருளில் உதளங்கோடு எனப் புணரும். உதள் யாட்டினைக் குறிப்பின் யாட்டின்கொம்பு என்ற பொருளில் உதட்கோடு என்றே புணரும். தொல். 400 நச். வெயில் இருள் பற்றிய செய்திகள் தொல்காப்பியம் 377, 402ஆம் நூற்பாக்களில் உள்ளன. மக்கட்கை என்பது தொல் 404ஆம் நூற்பாவானும் மக்கட்பண்பு என்பது அந்நூற்பாவின் மிகையானும் கொள்ளப்படும், அந்நூற்பாவின் ‘தக்கவழி’ என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர் ‘பெரும்பான்மை மக்கள் உடம்பு உயிர் நீங்கிக் கிடந்த காலத்தில் அஃது இம்முடிபு பெறும்’ என்று குறிப்பிட்டதை இவரும் குறித்துள்ளார். நன்னூல் விருத்தியுரை போல அன்றி இவர் காட்டின யாவும் அஃறிணை எடுத்துக்காட்டுக்களே. ஒத்த நூற்பாக்கள்: ‘நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலும் அறியத் தோன்றிய நெறியியல் என்ப.’ தொல். 160 ‘பூல்வேல் என்றா ஆல்என் கிளவியொடு ஆம்முப் பெயர்க்கும் அம்இடை வருமே.’ 375 ‘வெயில்என் கிளவி மழைஇயல் நிலையும்.’ 377 ‘இருள்என் கிளவி வெயில்இயல் நிலையும்’ 402 ‘மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே.’ 404 ‘தனி நெடிற் பின் பண்ணிய ஒற்றின்பின் தான்வரப் போம்ஒருகால் பயின்றே. வீ. 16 ‘ஒன்று அழிந்து போதலும் உண்டு.’ நே. 17 |