பக்கம் எண் :

600

முழுதும் |           நன். 229

‘ஆலம் வேலும் அம்மொடு சிவனும்.’           மு,வீ,பு. 109

‘பூலும் அம்மொடு யோவது இயல்பே,’       200

‘அத்தும் இன்னும் அடையும் வெயிலே.’      202

‘இன்னும் அத்தும் இருளொடு சிவனும்.’     225

லகர ஈற்றுச் சிறப்புவிதி 140-142
அல்வழியில் ‘நெல்’ முதலியவற்றின் முன் வன்கணம்

140 நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல.

இதுவும் அது

(இ-ள்.) நெல் செல் கொல் சொல் என்னும் இந்நாற் சொல்லும் அல்வழியைச் சொல்லும் இடத்துத் தாம் வேற்றுமை முடிபின் இயல்பினவாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடியும் என்றவாறு.

உம்மை சிறப்பு

வரலாறு: நெற்காய்த்தது செற்கடிது கொற்கடிது சொற்கடிது-சிறிது-தீது-பெரிது எனவரும். 22

விளக்கம்

இதுவும் அது-எய்திய ‘அல்வழி அவற்றோடு உறழ்வும்’ 137 என்ற பொதுவிதி விலக்கித் திரிபேபெறும் என்ற சிறப்பு விதிவகுத்தது.

வேற்றுமைக்கண் நெற்குறுமை என்றாற்போலத் திரிதல் பல லகர ஈற்றுச் சொற்களுக்கும் பொதுவான செய்கை. ஆனால் நெற்காய்ந்தது போன்ற அல்வழி முடிபு இந்நாற் சொற்களுக்குமே சிறப்புச் செய்கை என்பதற்காக ‘உம்மை சிறப்பு’ என்றார்.