பக்கம் எண் :

601

ஒத்த நூற்பாக்கள்:

முழுதும்           தொல். 371

‘நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்வழி யானும் றகரம் ஆகும்.’           நன். 232           மு. வீ. பு. 195

‘வல்’ முன் நாற்கணம்

141 வல்லே தொழிற்பெயர் அற்றுஇரு வழியும்
பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வும்ஆம்.

இதுவும் அது,

(இ-ள்.) வல் என்னும் சொல் இருவழியும் தொழிற்பெயர் இயல்பிற்றாய் உகரம் பெற்று முடியும்; பலகை என்னும் சொல்லும் நாய் என்னும் சொல்லும் வருமொழியாய் வரினும், உம்மையால் பிற சொற்கள் வரினும் வேற்றுமைக்கண் அகரமும் பெற்று முடியும்: உம்மையான் உகரமும் பெற்று முடியும்.

எ-டு. வல்லுக்கடிது-சிறிது-தீது-பெரிது-ஞான்றது-நீண்டது-மாண்டது எனவும்,

கடுமை-சிறுமை-தீமை-பெருமை-ஞாற்சி-நீட்சி-மாட்சி எனவும், வல்லப்பலகை வல்லநாய் எனவும்,

வல்லக்கடுமை-சிறுமை-தீமை-பெருமை-ஞாற்சி-நீட்சி-மாட்சி-வலிமை எனவும்,

வல்லப்பலகை வல்லநாய் எனவும் முறையே காண்க, 23