பக்கம் எண் :

602

விளக்கம்

“ ‘வரினும்’ என்னும் எதிரது தழீஇய எச்சஉம்மையான் பிறபெயர் என்பதூஉம், ‘அவ்வும்’ என்ற இறந்ததுதழீஇய எச்ச உம்மையான் உகரச் சாரியை என்பதூஉம் பெற்றாம்.” நன், 237 விருத்தியுரை.

வல்லுநாய்-வல்லாய நாய் என இருபெயரொட்டு.
வல்லநாய்-வல்லினுள் நாய் என வேற்றுமை.

வல்லுப்பலகை, வடுலப்பலகை-வல்லினது அறை வரைந்த பலகை என வேற்றுமை-நன்.231 விருத்தி.

“ ‘அவ்வும்’ என்ற உம்மையான், உகரப்பேறு வலியுடைத்து,” நன், 230 மயிலை.

ஒத்த நூற்பாக்கள்:

‘வல்லென் கிளவி தொழிற்பெயர் இயற்றே.’           தொல். 373

‘நாயும் பலகையும் வரூஉங் காலை
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே
உகரம் கெடுவழி அகரம் நிலையும்.’           தொல். 374

முழுதும்           நன். 231

‘வல்உக ரத்தொடு வரும்என மொழிப.’           மு. வீ. பு. 197

‘பலகையும் நாயும் வரூஉங் காலை
அகரச் சாரியை அடையும் என்ப.’      198

‘இல்’ என்பதன் முடிபு

142 இல்-என் இன்மைச் சொற்குஐ-அடைய
வன்மை விகற்பமும் ஆகா ரத்தொடு
வன்மை ஆகலும் இயல்பும் ஆகும்.