பக்கம் எண் :

603

இது லகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தாதது எய்துவித்தலும் எய்தியது இகந்துபடாமை காத்தலும் நுதலிற்று.

(இ-ள்.) இல் என்று சொல்லப்படும் ஒருபொருளினது இல்லாமையை உணர்த்தி நிற்கும் லகரஈற்று வினைக் குறிப்பு முற்றுச்சொற்கு ஐகாரம் இறுதி வர வல்லொற்று ஒரு கால் ‘மிக்கும் ஒருகால் மிகாதும் உறழ்ந்து முடிதலும் ஆகாரம் இறுதிவர அதனொடு வல்லொற்று மிக்கு முடிதலும், அவ்விரு திறனும் இன்றி இயல்பாய் முடிதலும் பொருந்தும் என்றவாறு.

உறையுளை உணர்த்தி நிற்கும் இல் என்னும் லகர ஈற்று இடப்பெயரின் நீக்குதற்கு ‘இல்என் சொல்’ என்று ஒழியாது’ இல்என் இன்மைச்சொல்’ என்றும், ஒரு பொருளினது இல்லாமையை உணர்த்தி நிற்கும் ‘இல்லை’ என்னும் ஐகார ஈற்று வினைக்குறிப்பு முற்றுச்சொல்லின் நீக்குதற்கு இன்மைச்சொல் என்று ஒழியாது ‘இல்என் இன்மைச்சொல்’ என்றும் கூறினார்.

வரலாறு: இல்லைக்கல் இல்லைகல், இல்லாக்கல் இல்கல் சுனை -துடி-பனை என முறையே காண்க.

விதிஉயிர்ஈறாம் ஐகாரஈற்றுமுன் உறழ்ந்தும் ஆகார ஈற்றுமுன் மிக்கும் முடியுமேனும், நிலைமொழிச் செய்தி கூறுவார் வருமொழிச் செய்தியும் உடன் கூறினார்.

இயல்புஉயிர்ஈறு விதிஉயிர்ஈறு எழுத்து ஒப்புமையான் ஒன்றுபோலத் தோன்றி ஒருமுடிபு எய்தினவேனும் ஓசை வேறுபாட்டான் வேறுபட நிற்பன ஆதலின். இல்லைக்கல் இல்லைகல் இல்லாக்கல் எனவரும் இயல்பு உயிர்ஈற்று முடிபும், இவ்வாறு வரும் விதி உயிர்ஈற்று முடிபும் ஓசை வேறுபாட்டான் வேறுபடுமாறு, இயல்பு உயிர்ஈற்று முடிபிற்கு ஒலி ஊன்றாது ஒரு திரண்மையாக ஓசை ஒற்றுமைப்படச் சொல்லுதலும், விதி உயிர்ஈற்று முடிபிற்கு ஒலி