604 ஊன்றி ஓசை இடையறவு படச் சொல்லுதலும் என்று உணர்க. இன்னும், இல்கல் என்னும் முற்றுச்சொல் முடிபும் அவ்வாறு வரும் பண்புத்தொகை முடிபும் இவ்வாறே வேறுபடுத்து உணர்க. இங்ஙனம் முடித்தல் ஆசிரியர் தொல்காப்பியனார்க்குக் கருத்து என்பது, ‘இல்என் கிளவி’ தொல். 373 என்னும் சூத்திரத்து உரையாசிரியர் உரையான் உணர்க. இனி, இல் என்பதன் முடிபாக இங்ஙனம் புணர்த்த சொல்லே அன்றி இல்லை என ஐகார ஈறாய் நிற்பது ஒரு சொல் இன்று எனவும், இல்குணம் இல்லாக்கொற்றன் என்றாற்போலும் இல் என்பதன் முடிபு ஆகிய இவற்றை இல் என்னும் வினைக்குறிப்பு முதல்நிலை அடியாகத் தோன்றிய பெயரெச்சமறை தொக்கும் விரிந்தும் நின்றன என்றும் உரை கூறுவாரும் உளர். அவர்க்கு அது கருத்து அன்மை ‘முன்னிலை வியங்கோள்’ தொல். சொல் 224 என்னும் சூத்திரத்துள் ‘யான் இல்லை; யானும் நீயும் இல்லை’ என்றாற்போல வருமொழியொடு புணராமல் அவர் சொல் ஒத்தினுள் காட்டிய உதாரணங்களே, இல் என்பதன் முடிபு அன்றி இல்லை என இயல்பாகவே நிற்கும் ஐகார ஈற்றுச் சொல்லும் ஒன்று உளது என்பதற்குச் சான்று ஆகலானும், ‘இன்மை செப்பல்’ (தொல். சொல். 224) என்பதற்கு’ இல்லை என்னாது இன்மை என்பதனால் இல்லை என்பதும் இல் என்பதும் என இரண்டாயிற்று’ என்று உரையாசிரியர் சேனாவரையரை உள்ளிட்ட தொல்லாசிரியர் எல்லாரும் உரை கூறியவாற்றானும், ‘அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்’ (குறள். 170) என்றாற் போலச் சான்றோர் செய்யுட்கண் அவ்விரு சொல்லும் பயின்று வருதலானும், |