605 பெயரெச்சமறை தொக்கும் விரிந்தும் நின்றதேல், அவற்றிற்கு இம்முடிபு ஈண்டுக் கூறல் வேண்டாமையானும் அறிக. அன்றியும், அன்மை முதலியவற்றையும் இவ்வாறு புணர்க்க வேண்டுதலானும் அவர்க்கு அது கருத்து அன்று என உணர்க. 24 விளக்கம் எய்தாதது எய்துவித்தல் - ஆகாரத்தொடு வன்மை ஆதலும் இயல்பும், எய்தியது இகந்து படாமல் காத்தல்-வன்மை விகற்பம். ‘இல்’ என்று வாளாகூறின், இல்லத்தையும் உணர்த்தும் ஆதலின் ‘இல்என் இன்மைச் சொல்’ என்றார், வாளா ‘இன்மைச் சொல்’ எனின், இல்லை என்பதனையும் குறிக்கும்; அதனை நீக்குதற்கு ‘இல் என் இன்மைச் சொல்’ என்றார். இல்லைக்கல் இல்லைகல் - வன்மை விகற்பம் இல்லாக்கல் - ஆகாரத்தொடு வன்மை ஆதல் இல்கல் - இயல்பு ஐகார ஈற்றுமுன் உறழ்தல் ‘வேற்றுமை அல்வழி இஐ என்னும்’ (77) என்பதனாலும், ஆகார ஈற்றின்முன் மிகுதல் ‘இயல்பினும் விதியினும்’ (82) என்பதனாலும் பெறப்படுமேனும், நிலைமொழிச்செய்தி விளங்குவதற்காகவே வருமொழிச்செய்தியும் உடன் கூறினார். இயல்புஉயிர்ஈற்று இல்லைக்கல் என்பது இடையே ஒலியை அழுத்தாது ஒரே வகையாக ஒலிக்கப்படும். விதி |