பக்கம் எண் :

606

உயிர்ஈற்று இல்லைக்கல் என்பது ஐகாரத்தில் ஒலி ஊன்றுதலால் இடையறவுபட இரு கூறாக ஒலிக்கப்படும். இல்கல் என்னும் பண்புத்தொகை ஒலி இடையறவுபடாமல் ஒரே பிண்டமாக ஒலிக்கப்படும். இஃது உரையாசிரியர் கருத்தை உட்கொண்டு சொற்றது.

“இஃது இல் என்பதொடு முதல்நிலை நின்று வருயொடு இல்லைக்கல் இல்லைகல் முதலியவாகப் புணர்ந்தது என்று அறிவித்தற்கு ‘இல்என் கிளவி’ என்றும், ‘இயற்கை ஆதலும்’ என்றும் கூறினார். இம்முடிபு வினையியலுள் விரவு வினைக்கண் ‘இன்மை செப்பல்’ (தொல். சொல். 222) என்புழி ‘இல்லை இல்’ என்று உரை கூறிய அதனாலும், அவன் இல்லை என்றாற்போல்வன உதாரணமாக எல்லா ஆசிரியரும் காட்டியவாற்றானும் உணர்க. ‘இதனானே, இங்ஙனம் புணர்த்த சொல் அன்றி, இல்லை என ஐகார ஈறாய் நிற்பதொரு சொல் இன்மையும் உணர்க. ஆயின், இன்மை முதலியவற்றையும் இவ்வாறே புணர்க்க எனின், அவை வருமொழி இன்றி ஒரு சொல்லாய் நிற்றலின் புணர்கார் ஆயினார்.’ (தொல். 373-நச்)

‘இல்லாக் கொற்றன் முதலிய ஆகாரமும் வல்லெழுத்தும் பெற்றன, எண்ணில் குணம் முதலியனவும் இல்லாக் கொற்றன் முதலியனவும் இல் என்னும் வினைக்குறிப்பு முதனிலை அடியாகத்தோன்றி பெயரெச்சமறை தொக்கும் விரிந்தும் நின்றன. தொல். 373 நச்.

இங்ஙனம் கூறிய நச்சினார்க்கினியர் உரையை இவ்வாசிரியர், அவரே தொல் சொல். 22ஆம் நூற்பா உரையுள் யான் இல்லை, யானும் நீயும் இல்லை என ஒரு முற்றுச் சொற்றொடருள் இறுதிச் சொல்லாக வருமொழி அவாவாத வகையில் இல்லை என்ற சொல்லைப் புணர்த்து எடுத்துக் காட்டுத் தந்தமையானும், ‘இன்மை செப்பல்’ என்பதற்கு இல் என்பதே அன்றி இல்லை என்பதனையும் எல்லோரும்