பக்கம் எண் :

607

எடுத்துக் காட்டாகத் தந்துள்ளமையானும், இல்லை என்பது இல் என்பதன் திரிபு ஆயின் அதனை எடுத்துத் தனியே கூறுதல் வேண்டாமையானும் சான்றோர் செய்யுட்களில் ஒரே பாடலில் இல் என்பதும் இல்லை என்பதும் வந்துள்ளதனாலேயே அவை தனித்தனிச்சொல் என்பது பெறப்படும் ஆகலானும், பெயரெச்சமறை தொக்கும் விரிந்தும் நின்றதேல் அவை விதியீறாய் ஆகாரஈற்றுள் அடங்குதல் கூடும் ஆகலானும், பண்புத்தொகையாயின் நிலைமொழி வருமொழியாகப் பிரித்தல் கூடாமையானும்,

‘அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையுன்’ (தொல் சொல். 216) என்பனவற்றுள் இன்மைக்கு இல் என்பதே இயற்கைச்சொல்; இல்லை என்பது அதன் திரிபே எனின் அன்மை முதலாயினவற்றிற்கும் அல்-உள்-வல் என்பனவே இயற்சொல், அன்று-உண்டு-வற்று என்பன அவற்றின் திரிபு எனல் வேண்டுமாதலானும், அல் முதலியன இல் என்பது போல வினைமுற்றாய் வருதல் இல்லாமையானும் என இவ்வாறு மறுத்து, இல் என்ற சொல்வேறு என்பதனையும், அவ்வில் என்பதே ஆகாரச் சாரியைபெற்று இல்லா என நிற்பது என்பதனையும் வலியுறுத்துகிறார்.

‘இல்லைகல்’ என்றாற்போன்ற இயல்புவிதி உயிரீறுகளிடை ஓசை வேற்றுமை காணப்படும் என்பதை உரையாசிரியர் ‘இல்லைகல்’ இல்கல் என்பன, இல்லை என்னும் ஐகார ஈற்றுச்சொல் முடிபு அன்றோ என்றும், இல்லாக்கல் என்பது உள்ள என்னும் பெயரெச்சத்து எதிர்மறை ஆகிய ஆகார ஈற்றுச் சொல்லது முடிபு அன்றோ என்றும், இல்கல் என்பது பண்புத்தொகை முடிபு அன்றோ என்றும் கூறின் அம்முடிபுகளொடு இம்முடிபுகள் எழுத்து ஒப்புமை அன்றி இவை ஓசை வேற்றுமை உடைய என்பதுபோலும் கருத்து, அவ்வோசை வேற்றுமையாவன ஐகார ஈறாயவழி அவ்வைகாரத்துமேல் ஒலி ஊன்றியும், லகார ஈறாயவழி அந்த லகார ஒற்றமேல் ஒலி ஊன்றியும், அந்த லகார ஈறு இயல்பு முடிபாகிய வழிப் பண்புத்தொகை போல ஒரு திரண்மை