பக்கம் எண் :

608

யாய் ஒலியாது இடையற்று லகரத்தின்மேல் ஒலி ஊன்றியும் ஆகார ஈறாயவழி ஒரு திரண்மையாய் ஒலியாது அவ்வாகாரத்தின் மேல் ஒலி ஊன்றியும், ஆண்டு லகார ஈறாய வழி ஒரு திரண்மையாய் ஒலியாது அந்த லகரத்தின்மேல் ஒலி ஊன்றியும் வரும் வேறுபாடுகள் போலும்; (தொல். 373) என்று கூறியவாற்றான் அறிக.

‘இல் என்னும் பண்பு அடி நின்று வருமொழியோடு புணர்வழி வரும் சாரியை ஆதலின், இவ்விரு சாரியை தோன்றிய வழியும் இல்பொருள் என்னும் பண்புப் புணர்ச்சி போலப் பண்புத் தொகையாம் என்க. இது மெய்யீற்றுப் புணரியல் ஆதலானும், லகர ஈற்றிற்குப் பொதுவிதி கூறிக் சிறப்புவிதி கூறும் வழி ‘இன்மைப் பொருளைத்தரும் இல் என்னும் சொற்கு’ என விதந்தமையானும், விகுதியடைதல் பதவியலுள் அன்றி ஈண்டுக் கூறுவேண்டாமையானும் ஆகாரத்தோடு வன்மை ஆகலும் என வல்லினப்பேற்றோடு ஆகாரத்தையும் உடன் நிகழ்த்திக் கூறுதலானும், ‘இயல்பும் ஆகும்’ என்றமையானும், மறைப்பொருளை இல் என்னும் பகுதி அன்றி ஆகாரம் தரவேண்டாமையானும் தருமேல் இன்மைக்கு மறையாய டண்மைப் பொருளைத் தர வேண்டும் ஆதலானும், ஆகார மறைவிகுதி தெரிநிலைக்கு அன்றிக் குறிப்பிற்கு வாராமையானும், ஈண்டுப்பெறும் ஐகார ஆகாரங்கள் சாரியையே அன்றிக் குறிப்புமுற்று விகுதியும் எச்சத்தின்கண் வந்த மறை விகுதியும் எச்சத்தின் கண் வந்த மறை விகுதியும் அல்ல என்க.

இல்லைப் பொருள் என்ற பண்புத் தொகைக்குப் குறிப்பு முற்றுத் தொடருக்கும் வேறுபாடு பண்புத்தொகை ஒரு மொழிபோல் நடத்தலும், குறிப்பு முற்றுத்தொடர் விட்டிசைத்து நடத்தலும் தம்முள் வேற்றுமை என்க. இல்லாப்பொருள் என்பது இங்ஙனம் கூறியவாறே பண்புத் தொகையாவும் பெயரெச்சத் தொடராகவும் கொள்ளப்படும் போதும் விட்டிசையாமையும் விட்டிசைத்தலுமே தம்முள் வேறுபாடு என்க,’ (நன். 233 விருத்தியுரை)