609 ஒத்த நூற்பாக்கள்: ‘இல்லென் கிளவி இன்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலும் ஐஇடை வருதலும் இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும் கொளத்தகு மரபின் ஆகிடன் உடைத்தே.’ தொல். 372 முழுதும் நன். 233 ‘இன்மை உணர்த்தும் இல்என் கிளவிக்கு ஐகான் வருவழி இயல்பொடு மிகலும் ஆகாரம் வருவழி மிகலுமாம் வேற்றுமை.’ மு. வீ. பு. 196 சில ளகர ஈற்றுப் பெயர்க்குச் சிறப்புவிதி 143 புள்ளும் வள்ளும் தொழிற் பெயரும் மானும் இஃது எய்தியதன்மேல் சிறப்புவிதி கூறுகின்றது. (இ-ள்:) புள் என்னும் பெயர்ச்சொல்லும் வள் என்னும் பெயர்ச்சொல்லும், இருவழிக்கண்ணும் ளகர ஈற்றுத் தொழிற்பெயரைப்போல, வன்கணமும் மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வர உகரம் பெற்றும் முடியும் என்றவாறு. வரலாறு: புள்ளுக்கடிது வள்ளுக்கடிது-சிறிது-தீது-பெரிது-ஞான்றது-நீண்டது-மாண்டது-வலிது எனவும் கடுமை-சிறுமை-தீமை-பெருமை-ஞாற்சி-நீட்சி மாட்சி-வலிமை எனவும் வரும். புள்கடிது புட்கடிது, வள்கடிது வட்கடிது எனவும் புட்கடுமை வட்கடுமை எனவும் |