பக்கம் எண் :

610

புண்ஞான்றது வண்ஞான்றது எனவும்
புண்ஞாற்சி வண்ஞாற்சி எனவும்

உம்மையான் பொதுவிதி பெறுதலும் கொள்க. 25

விளக்கம்

எய்தியது-‘லள வேற்றுமையில்’ என்பதனால் (137) பெற்ற வேற்றுமைத்திரிபும் அல்வழி உறழ்வும் முதலியன.

சிறப்புவிதி-தொழிற்பெயர் போல ஈரிடத்தும் உகரம் பெற்று வலிவரின் மிக்கும் மெலிவரின் இயல்பாகவும் புணர்தல். ‘தொழிற்பெயரும்’ என்ற இறந்தது தழீஇய எச்ச உம்மையான் பொதுவிதி பெறுதலும் கொள்ளப்பட்டது.

எடுத்துக்காட்டுகள் யாவும் தொல் 403இல் நச்சினார்க்கினியர் உரைத்தனவே.

“புள்ளு வலிது புள் வலிது புள்ளுவன்மை புள்வன்மை என வகரத்தின் முன்னர் உகரம் பெற்றும் பெறாதும் முடிதலின் ‘நின்ற சொல்முன் இயல்பாகும்மே’ தொல். 144 என்றதனால் முடியாமை உணர்க. இது வள்ளிற்கும் ஒக்கும்.” தொல். 403 நச்.

ஒத்த நூற்பாக்கள்:

‘புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல்,’           தொல். 403

முழுதும்           நன். 234

‘வள்ளும் புள்ளும் உகரமொடு சிவனும்.’           மு. வி. பு. 226

வகரஈற்றுச் சிறப்புவிதி-26,27
அல்வழியில் சுட்டுவகரம் முன் முக்கணம்

144 சுட்டு வகரம் மூஇனம்உற முறையே
ஆய்தமும் மென்மையும் இயல்பும்ஆம் அல்வழி.