பக்கம் எண் :

628

உயிர்ஈற்றுப் பெயர்களொடு உயிர்முதல் உருபுகளும் ஒற்றுமுதல் உருபுகளும் மேலை வேற்றுமைப் பொருட்புணர்ச்சியை ஒத்து உடம்படுமெய் பெற்றும் உயிர்ஏறியும் வல்லெழுத்துமிக்கும் இயல்பாயும் முடிந்தவாறு காண்க.

உயர்திணைப் பெயர் முன்னும் விரவுப்பெயர் முன்னும் மிகுதி முறையே ‘ சிலவிகாரமாம் உயர்திணை (71) என்றதனானும் ‘பொதுப்பெயர் உயர்திணைப்பெயர்கள்’ (71) என்ற முறையில் கூற்றானும் கொள்க.

அவனை-அவனொடு-அவனின்-அவனது எனவும்

பொன்னை-பொன்னொடு-பொன்னின்-பொன்னது எனவும்

அதற்கு-அவன்கண் எனவும்

பொற்கு-பொன்கண் எனவும்

சாத்தற்கு-சாத்தன்கண் எனவும்

ஒற்றீற்றுப் பெயர்களோடு உயிர்முதல் உருபுகளும் ஒற்றுமுதல் உருபுகளும் வந்து மேலே வேற்றுமைப் பொருட் புணர்ச்சியினை ஒத்து உயிர்ஏறியும், தனிக்குறில் முன்ஒற்று இரட்டித்தும், திரிந்தும், இயல்பாயும் முடிந்தவாறு காண்க. உயர்திணைப்பெயர் முன்னும் விரவுப்பெயர் முன்னும் னகரம் திரிதற்கு முன் உரைத்தாங்கு உரைக்க, பிறவும் இவ்வாறே உய்த்து உணர்க.

பொருட் புணர்ச்சிக்கண் புளியங்கோடு அரையங்கோடு என்றாற்போல உருபுபுணர்ச்சிக்கண்ணும் அம்முப்பெறுவன பெறாது, புளிக்கு-புளிக்கண்-அரைக்கு-அரைக்கண் என முடிவன ‘பெரும்பாலும் ஒக்கும்’ எனவே ‘சிறுபான்மை ஒவ்வாதனவும் உள’ என்று முடித்துக்கொள்க.

இங்ஙனம் புணர்ந்த வேற்றுமை உருபுகளை நிலைமொழியாக நிறுத்தி ஈண்டே வருமொழியொடு புணர்ப்பாரும் உளர்.